மாவட்ட செய்திகள்

பாலியல் கும்பல் மீது நடவடிக்கை கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் + "||" + College students stall the road demanding action against sex mob

பாலியல் கும்பல் மீது நடவடிக்கை கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

பாலியல் கும்பல் மீது நடவடிக்கை கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
பொள்ளாச்சியில், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்ட கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர்.
பொன்மலைப்பட்டி,

பொள்ளாச்சியில், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்ட கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பின்னர், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் காட்டூர் ஆயில் மில் வரை ஊர்வலமாக வந்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக நோயாளியை ஏற்றிக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸ் செல்ல மாணவர்கள் எழுந்து வழிவிட்டனர். மறுபடியும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்டதாக 30 மாணவர்களை அரியமங்கலம் போலீசார் கைது செய்து மாலை விடுவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பேரிகார்டுகளை அகற்றக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பு
பேரிகார்டுகளை அகற்றக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
2. அஸ்தினாபுரத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்பக்கேட்டு விவசாயிகள் சாலை மறியல்
அஸ்தினாபுரத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்பக்கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. அரசு கல்லூரியில் 11 பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்
குரும்பலூர் அரசு கலை- அறிவியல் கல்லூரியில் 11 பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து மாணவ- மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள இரட்டியபட்டியில் கடந்த சில மாதங்களாக முறையாக காவிரி குடிநீர் வழங்காத நிலையில் ஒரு பகுதிக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடுவதாக கூறப்படுகிறது.
5. கடியபட்டணம் அலை தடுப்பு சுவரை சீரமைக்க வலியுறுத்தி சாலை மறியலுக்கு முயற்சி
கடியபட்டணம் அலை தடுப்பு சுவரை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். இது தொடர்பாக பிரின்ஸ் எம்.எல்.ஏ.வுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.