மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 314 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர் + "||" + In Tiruvarur district, 15 thousand 314 students are students of SSLC. Wrote the exam

திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 314 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 314 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்
திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 314 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர்.
திருவாரூர்,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 406 மாணவர்கள், 7 ஆயிரத்து 722 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 128 மாணவர்கள் தேர்வு எழுத இருந்தனர். இதற்காக 66 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 15 ஆயிரத்து 314 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 814 பேர் தேர்வு எழுதவரவில்லை.


தேர்வு மையங்களில் தேவையான குடிநீர், மின்வசதி போன்ற அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளன.

தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர், பறக்கும் படையினர் உள்பட மொத்தம் 1,534 பேர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

அனைத்து தேர்வு மையங் களுக்கும் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டிருந்தது. வருகிற 29-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை