எனக்கு மனைவி உள்ளார், நரேந்திர மோடிக்கு மனைவி இல்லை கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் பாபுராவ் சின்சனசூர் பேச்சு


எனக்கு மனைவி உள்ளார், நரேந்திர மோடிக்கு மனைவி இல்லை கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் பாபுராவ் சின்சனசூர் பேச்சு
x
தினத்தந்தி 17 March 2019 3:45 AM IST (Updated: 17 March 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

நானும் பிரதமர் நரேந்திர மோடி போன்றவன் தான். எனக்கு மனைவி உள்ளார், நரேந்திர மோடிக்கு மனைவி இல்லை என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் பாபுராவ் சின்சனசூர் நேற்று கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதாவின் மூத்த தலைவர் பாபுராவ் சின்சனசூர். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீதான அதிருப்தி காரணமாக சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையில் பாபுராவ் சின்சனசூர் மந்திரியாகவும் செயல்பட்டார். இந்த நிைலயில் யாதகிரி மாவட்டம் குர்மித்கல்லில் பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் பாபுராவ் சின்சனசூர் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் உமேஷ் ஜாதவை வெற்றி பெற செய்தால் மத்தியில் அமையும் பா.ஜனதா ஆட்சியில் அவருக்கு மத்திய மந்திரி பொறுப்பு கிடைக்கும். உமேஷ் ஜாதவ் மத்திய மந்திரியானால், தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும் மந்திரி போன்றவர்கள் தான். இதனால் அனைவரும் சேர்ந்து உமேஷ் ஜாதவை வெற்றி பெற செய்ய வேண்டும்.

நானும் பிரதமர் நரேந்திர மோடி போன்றவன் தான். எனக்கு மனைவி உள்ளார். நரேந்திர மோடிக்கு மனைவி இல்லை. இதுதான் எங்களுக்கு இருக்கும் வித்தியாசம். மல்லிகார்ஜூன கார்கே பழைய மலை. அவர் மெதுவாக சரிவை சந்தித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story