மாவட்ட செய்திகள்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து நடந்தது + "||" + The All India Youth Congress protest demonstrated the Pollachi sexual incident

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து நடந்தது

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து நடந்தது
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் போலீசார் அனுமதி தர மறுத்தனர். இதனை மீறி திருவாரூர் பஸ் நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்்பில் ஆர்்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன் கலந்து கொண்டு பேசினார்.


இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் நல்லசுகம், சரவணன், பாக்யராஜ், கார்்த்திக், சிவரஞ்சித், மாணவர் மன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கணேஷ், காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை உயர்்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் பொள்ளாச்சி பகுதியில் பணியாற்றிய அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் விசாரணை செய்ய வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. ஊதிய உயர்வு வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதிய உயர்வு வழங்கக்கோரி திருவாரூரில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பிரியங்கா காந்தி கைதுக்கு கண்டனம்: நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தி கைது சம்பவத்தை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எச்.வசந்தகுமார் எம்.பி. கலந்து கொண்டார்.
5. பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.