குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2019 3:30 AM IST (Updated: 17 March 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வி‌ஷம் குடித்து தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகூர்,

நாகூரை அடுத்த வடக்கு பால்பண்ணைசேரியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 42). தொழிலாளி. இவருடைய மனைவி பூரணராதா (35). ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் பூரணராதா, கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து பலமுறை பூரணராதாவின் பெற்றோர் வீட்டுக்கு ராஜ்குமார் சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் பூரணராதா வரமறுத்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார்.


இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை(வி‌ஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story