தஞ்சாவூர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் இன்று அறிவிப்பு ஜி.கே.வாசன் தகவல்


தஞ்சாவூர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் இன்று அறிவிப்பு ஜி.கே.வாசன் தகவல்
x
தினத்தந்தி 18 March 2019 4:45 AM IST (Updated: 17 March 2019 9:10 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக ஈரோட்டில் ஜி.கே.வாசன் கூறினார்.

ஈரோடு,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். இதன் அடிப்படையிலேயே எங்கள் தேர்தல் அறிக்கையும் இருக்கும். த.மா.கா. சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நாளை (அதாவது இன்று) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார். வேட்பாளர் அந்த தொகுதியை சேர்ந்தவரும், மக்களுக்கு நன்கு பரிச்சயமானவராகவும் இருப்பார்.

சைக்கிள் சின்னம் கிடைக்காத பட்சத்தில் தஞ்சாவூர் தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story