மாவட்ட இறகுப்பந்து போட்டி


மாவட்ட இறகுப்பந்து போட்டி
x
தினத்தந்தி 18 March 2019 4:00 AM IST (Updated: 18 March 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளவர்களுக்கு இரட்டையர் பிரிவில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் இடம் பிடித்த அணிக்கு ரூ.3 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.2 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.ஆயிரமும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் பெரம்பலூர் மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் தலைவர் டாக்டர் கிருபாகரன், செயலாளர் அரவிந்தன் ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story