வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் அரசு பஸ் டிக்கெட்டில் விழிப்புணர்வு வாசகம்


வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் அரசு பஸ் டிக்கெட்டில் விழிப்புணர்வு வாசகம்
x
தினத்தந்தி 18 March 2019 5:05 AM IST (Updated: 18 March 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இடம் பெற்றுள்ளதா? என்பதை வாக்காளர்கள் பரிசோதித்து கொள்ளும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இடம் பெற்றுள்ளதா? என்பதை வாக்காளர்கள் பரிசோதித்து கொள்ளும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு சாலை போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி) சார்பில் பஸ் டிக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதாவது டிக்கெட்டின் கீழ்பகுதியில் ‘நீங்கள், உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், பஸ் நிலையத்தில் உள்ள தகவல் பலகைகளிலும் இதேபோன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

Next Story