இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு


இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 19 March 2019 3:30 AM IST (Updated: 18 March 2019 10:19 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். கடந்த 9.2.2016 அன்று இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தளி கொத்தனூர் பக்கமுள்ள பி.பி.பாளையத்தை சேர்ந்த ஜெகன் (26) என்பவர் அங்கு வந்தார்.

பின்னர் அவர் இளம்பெண்ணை கடத்தி சென்று அந்த பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுண்டீஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் என மொத்தம் 11 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜெகனை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.

Next Story