குடிநீர் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை,
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை போடுவதற்கு, கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்தநிலையில் நேற்று ஆலங்குளம் அருகே உள்ள குறிஞ்சான்பட்டி ரதமுடையார்குளத்தை சேர்ந்த பெண்கள், தங்கள் ஊருக்கு வாரத்தில் ஒரு நாள் தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், தினமும் குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக பெட்டியில் மனுவை போட்டு சென்றனர்.இதேபோல் சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் அருகே உள்ள திருப்பூர் குமரன்நகர் மக்களும் தங்களுக்கு சீராக குடிநீர் வழங்க கேட்டு மனுவை பெட்டியில் போட வந்தனர்.
Related Tags :
Next Story