பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அரியலூரில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பெரம்பலூர்- அரியலூரில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால், வழக்கமான நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.
அரியலூர்,
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களிடம் முகநூல் (பேஸ்புக்) மூலம் நட்பாக பழகி, பின்னர் அவர்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெண்கள் மீதான இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன குரல்கள் வலுத்து வருகிறது. அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் மாணவிகள்- இளம் பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் மற்றும் முகவரியை வெளியிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் வள்ளுவன் நம்பி, மாவட்ட அட்வகேட்ஸ் அசோசியேசன் தலைவர் முகமது இலியாஸ் ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் நீதிமன்ற செல்லாமல் பணிகளை புறக்கணித்தனர். இதேபோல் அரியலூர், ஜெயங்கொண்டத்திலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வக்கீல்களின் நீதிமன்ற புறக்கணிப்பால் பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள், வழக்கமான நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் பணிபுரியும் சார்பு நீதிபதி, சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாகவும், நீதிக்கு மாறாகவும் தொடர்ந்து செயல்பட்டுவருவதாக கூறி, அவரது செயல்பாடுகளைக் கண்டித்து, சார்பு நீதிபதி மீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினர் சார்பு நீதிமன்றத்தை 9-வது நாளாக நேற்றும் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story