தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் தஞ்சை கலெக்டர் அறிவிப்பு
தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை தஞ்சை கலெக்டர் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை 18004258036 மற்றும் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.
இதில் பெறப்படும் புகார்கள், தொடர்புடைய கண்காணிப்பு குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளுர் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களை கண்காணிக்க ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் மாவட்ட அளவில் விளம்பரம் செய்ய ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு அறை, ஊடக மைய அறை, மாவட்ட தொடர்பு மையம் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் பார்வையிட்டார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story