கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
கிருஷ்ணகிரி,
தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதன்படி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் உள்ளிட்ட 4 இடங்களில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கர், ஆசைத்தம்பி ஆகியோர் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 75 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முதல் நாளான நேற்று வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்ய வரவில்லை. ஆனால் நேற்று 13 பேர் 36 விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், மனு தாக்கலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வருபவர்களை மெட்டல் டிடெக்டரைக் கொண்டு முழுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். எனவே கலெக்டர் அலுவலக பணியாளர்கள் அனைவரும் தங்களுடைய அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள், ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான விமல்ராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால் மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று, அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய, வருகிற 26-ந் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story