சாத்தனூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 2 வாலிபர்கள் கைது - நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்
சாத்தனூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற 2 வாலிபர்களை வனத்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்ததோடு அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
தண்டராம்பட்டு,
சாத்தனூர் அருகில் உள்ள ராதாபுரம் காப்புக்காடு பூமலை பகுதியில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் ராமநாதன், வனக்காப்பாளர்கள் வெங்கட்ராமன், சீனுவாசன், சம்பத், வனக்காவலர்கள் முருகன், கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனையும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர்கள் இளையங்கன்னி கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகன் வசந்த ஆரோக்கியராஜ் (வயது 30), சங்கராபுரம் அருகில் உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த தாவீது மகன் அமல்ராஜ் (29) என்பதும், 2 பேரும் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.1 லட்சத்தை அபராதம் விதித்து அதனை வசூலித்த பின் விடுதலை செய்தனர்.

Related Tags :
Next Story