தேர்தல் விளம்பரங்களை கண்காணிக்க வேண்டும் மண்டல அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


தேர்தல் விளம்பரங்களை கண்காணிக்க வேண்டும் மண்டல அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 9:34 PM GMT)

தேர்தல் விளம்பரங்களை கண்காணிக்க வேண்டும் என்று மண்டல அலுவலர்களுக்கு கலெக்டர் பொன்னையா அறிவுறுத்தினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பொன்னையா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, வாக்காளர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்ட 139 மண்டல அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மண்டல அலுவலர்கள் அனைவரும் தங்கள் மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் முறையாக உள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்குச்சாவடிகளின் அருகில் அரசியல் கட்சி, வேட்பாளர்களின் விளம்பரங்கள், அவர்களை சார்ந்த எந்தவொரு விளம்பர தட்டிகளும் இல்லாதவாறு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவி தேர்தல் அதிகாரி முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர்களை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

வாக்குச்சாவடி மைங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தளவாட பொருட் களை முறையாக எடுத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் அமைதியாகவும், சுமுகமாகவும் நடக்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Next Story