விமான நிலையத்தில் ரூ.4½ கோடி போதைப்பொருளுடன் பிரேசில் நாட்டு பெண் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை, உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தபிரேசில் நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை விமான நிலையத்திற்கு சம்பவத்தன்று எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து வந்த விமானம் ஒன்று தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று பெண் அதிகாரிகளை வைத்து சோதனை செய்தனர். அப்போது, அவர் தனது உள்ளாடைக்குள் ‘மேத்தகுலோன்’ என்ற போதைப்பொருளை ஆணுறையில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர் பிரேசில் நாட்டை சேர்ந்த தில்சா கோஸ்டா(வயது42) என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.4 கோடியே 40 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story