வானவில் : தீயணைக்கும் பணியில் ‘சி த்ரூ’ ஹெல்மெட்


வானவில் : தீயணைக்கும் பணியில் ‘சி த்ரூ’ ஹெல்மெட்
x
தினத்தந்தி 20 March 2019 7:29 AM GMT (Updated: 20 March 2019 7:29 AM GMT)

தீயணைக்கும் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு உதவும் வகையில் பல கருவிகளும் ரோபோக்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு குவேக் தொழில்நுட்ப நிறுவனம் ஒரு ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளது. செயற்கை அறிவாற்றல், மிகையாக காட்டப்படும் உண்மை ( AUGMENTED REALITY ) மற்றும் வெப்ப அறிவியல் ஆகிய மூன்று தொழில்நுட்பங்களையும் இணைத்து இந்த சி த்ரூ ( C THRU ) ஹெல்மெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

அடர்த்தியான தீயின் புகையில் தெளிவாக பார்க்க முடியாமல் தடுமாறுவது இது வரை வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த ஹெல்மெட் அந்த குறையை சரி செய்கிறது.அதாவது புகையிலும் பார்க்க வழி செய்கிறது. மேலும் இதை அணிந்து கொண்டிருக்கும் போது கண்களுக்கு எரிச்சல் ஏற்படாது. இதனால் அவர்கள் பல மடங்கு அதி விரைவாக செயல் புரிந்து தீயை அணைக்க முடியும். இந்த ஒளி புகும் கண்ணாடியை ரோபோக்கள் மற்றும் ட்ரோனிலும் பொருத்தி அவசர காலங்களின் போது பயன்படுத்தும் திட்டம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Next Story
  • chat