வானவில் : ஸ்மார்ட் சீலிங்பேன்


வானவில் : ஸ்மார்ட் சீலிங்பேன்
x
தினத்தந்தி 20 March 2019 7:49 AM GMT (Updated: 20 March 2019 7:49 AM GMT)

இனி வெயில் காலம். ஒவ்வொரு கோடைக் காலத்திலும் எதிர்வரும் கோடையின் வெப்பத்தை எப்படி தாங்கப் போகிறோமோ என்ற கேள்வியோடு மண்டையை பிளக்கும் 100 டிகிரி வெயிலில் அலுவலகம் சென்றுதான் திரும்புகிறோம்.

வசதி படைத்தவர்கள் வீடுகளில் ஏ.சி.க்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இருந்தாலும் அவரவர் வசதிக்கேற்ப நவீன தொழில்நுட்பத்தை பெற வந்துள்ளதுதான் ஸ்மார்ட் பேன். லாவா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இணை நிறுவனர் விஷால் ஷேகல் உருவாக்கிய நிறுவனம் தான் ஓட்டோமேட் இண்டர்நேஷனல். இந்நிறுவனம் 16 மாத ஆராய்ச்சியின் விளைவாக புதிய ஸ்மார்ட் பேனை உருவாக்கியுள்ளது.

இது புளூடுத் இணைப்பு மூலம் பிரத்யேக செயலி (ஆப்) மூலம் செயல்படக் கூடியது. இதில் குவால்காம் சிப்செட் உள்ளது. இதை பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.

வழக்கமான பேன்களில் 5 விதமான சுழற்சிகள்தான் இருக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட் பேனில் அவரவர் வசதிக்கேற்ப பேனின் வேகத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதில் மை ஏர் டெக்னாலஜி எனும் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்டெப்லெஸ் காற்று சுழற்சி தத்துவத்தைக் கொண்டது. ஆண்ட்ராய்டு மொபைல் போனில் ஓட்டோமேட் ஸ்மார்ட் செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்து செயல்படுத்தலாம்.

இதில் உள்ள கிளைமேட் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது. இதனால் புற சூழலுக்கேற்ப இதன் காற்று வேகம் மாறுபடும். அத்துடன் அறையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப மாறக் கூடியது. ஈரப்பதத்திற்கு ஏற்ப இதன் சுழற்சி வேகம் இருக்கும். இந்தியாவின் 10 நகரங்களின் வெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப இதன் சுழற்சி வேகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டோமேட் செயலியில் பிரீஸ் மோட் எனும் வசதி உள்ளது. இதை செயல்படுத்தினால் இயற்கை காற்று வீசுவதைப் போல உங்களை வருடும். அத்துடன் இதில் உள்ள டர்போ ஸ்பீடு அளவை நிர்ணயித்தால் அது வழக்கமான வேகத்தை விட 10 சதவீதம் கூடுதல் வேகத்தில் செயல்படும். இதில் குவால்காம் சி.எஸ்.ஆர். மெஷ் உள்ளது. புளூடூத் வி5.0 இணைப்பு வசதி உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் பேனை விரல் அசைவில் செயல்படுத்த முடியும்.

இந்த பேனின் விலை ரூ.3,999. இதை நிறுவுவதற்கான கட்டணமும் சேர்த்து விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பேனுக்கான ரிமோட் கண்ட்ரோல் விலை ரூ.149 ஆகும். Ottomate.com இணையதளத்தில் இன்றுமுதல் ஆர்டர் செய்து பெறலாம். மற்ற ஆன்லைன் இணையதளங்களில் ஏப்ரல் 2-ந் முதல் இது கிடைக்கும்.

Next Story