வானவில் : மெர்சிடஸ் பென்ஸ் கூபே ஏ.எம்.ஜி. சி 43 அறிமுகம்


வானவில் : மெர்சிடஸ் பென்ஸ் கூபே ஏ.எம்.ஜி. சி 43 அறிமுகம்
x
தினத்தந்தி 20 March 2019 5:16 PM IST (Updated: 20 March 2019 5:16 PM IST)
t-max-icont-min-icon

சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் ‘வி கிளாஸ்’ மாடலில் எம்.பி.வி. காரை அறிமுகம் செய்துள்ளது.

குடும்பத்துக்கு ஏற்ற வகையில் அறிமுகமாகியுள்ள இந்த காரின் விலை ரூ.75 லட்சமாகும். மெர்சிடஸ் ஏ.எம்.ஜி.சி43 கூபே மாடலாக இது அறிமுகமாகியுள்ளது. 2016-ம் ஆண்டு இந்நிறுவனம் ஏ.எம்.ஜி.சி 43 செடான் மாடலை அறிமுகம் செய்தது. சி கிளாஸ் பிரிவில் மேம்படுத்தப்பட்ட ரகமாக கடந்த ஆண்டு கேப்ரியோலெட் மாடல் அறிமுகமானது. இப்போது சி43 மாடலில் மேம்படுத்தப்பட்ட ரகத்தை அறிமுகம் செய்வதற்குப் பதிலாக இந்நிறுவனம் சி43 கூபே மாடலை புதிதாக உருவாக்கியுள்ளது.

இது 3 லிட்டர் டுவின் டர்போ சார்ஜ் டுவி6 என்ஜினைக் கொண்டது. இது 390 ஹெச்.பி. திறன் கொண்டது. 4.7 விநாடிகளில் இது 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும். இதில் அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம். இது 4 மேடிக் ஆல் வீல் டிரைவ் (அதாவது 4 சக்கரங்களின் சுழற்சி) கொண்டது. இதில் 9 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

இதில் உள்ள ஏ.டபிள்யூ.டி. சிஸ்டம் மூலம் 69 சதவீத டார்க் இழுவிசை திறன் கூடுதலாக பின் சக்கரங்களுக்கு கிடைக்கிறது. இத்துடன் ஏ.எம்.ஜி. ரைட் கண்ட்ரோல் சஸ்பென்ஷன் மற்றும் மூன்று விதமான ஓட்டும் தேர்வு நிலைகள் (கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ்) மற்றும் 5 டைனமிக் செலக்ட் டிரைவ் மோட் (கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், ஸ்லிப்பரி, தனி நபர் பயணம்) போன்ற தேர்வு நிலைகளை இதில் தேர்ந்தெடுக்க முடியும்.

பன்முக ஒளிரும் நிலைகளைக் கொண்ட எல்.இ.டி. முகப்பு விளக்கு, 18 அங்குல 5 ஸ்போக்ஸ் கொண்ட ஏ.எம்.ஜி. அலாய் சக்கரம், மேற்கூரை வசதி, சீட் பெல்ட், உட்புறம் சவுகரியமான பயணத்தை உறுதி செய்யும் வசதி, 10.25 அங்குல தொடு திரையுடன் கமாண்ட் இன்போடெயின்மென்ட் வசதி, ஆண்ட்ராய்டு ஆப், ஆப்பிள் கார் பிளே வசதிகளைக் கொண்டது. டிரைவர் உட்பட 4 பேர் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ. எம் 2 மாடலுக்கு இது போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

Next Story