சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 March 2019 10:30 PM GMT (Updated: 21 March 2019 5:20 PM GMT)

சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அடையாறு,

சென்னை பெசன்ட் நகர் ஓடைமாநகரை சேர்ந்தவர் பாலா. இவருடைய மகள் கீர்த்திகா(வயது 15). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவி கீர்த்திகா, நேற்று முன்தினம் ஆங்கில தேர்வு எழுதிவிட்டு மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார். அவரது தாயார், இரவில் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது மாணவி கீர்த்திகா, திடீரென வீட்டின் ஒரு அறைக்குள் சென்று மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த அவரது தாயார், மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சாஸ்திரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலவேசம் தலைமையிலான போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேர்வு பயம் காரணமாக மாணவி கீர்த்திகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story