நெல்லை கத்தோலிக்க பேராயரிடம் அ.தி.மு.க. வேட்பாளர் ஆசி பெற்றார்
நெல்லை கத்தோலிக்க பேராயரிடம் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் ஆசி பெற்றார்.
நெல்லை,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன், தொகுதியில் முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர் பாளையங்கோட்டையில் நேற்று நெல்லை கத்தோலிக்க பேராயர் (பொறுப்பு) அந்தோணி பாப்புசாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், பாளையங்கோட்டை மறைமாவட்ட செயலக முதல்வர் அந்தோணி குரூஸ் அடிகளார், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதி பாலபிரஜாபதி அடிகளார், அய்யா வழி பாடகர் சிவச்சந்திரன் ஆகியோரிடமும் ஆசி பெற்றார். செய்யது பீடி குழும நிறுவனர் ரபானி, ம.தி.தா. இந்து கல்லூரி நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் பங்குனி உத்திரத்தையொட்டி சேரன்மாதேவி அருகே உள்ள பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Related Tags :
Next Story