அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் டி.டி.வி. தினகரன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவது உறுதி மதுரை ஆதீனம் பேட்டி


அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் டி.டி.வி. தினகரன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவது உறுதி மதுரை ஆதீனம் பேட்டி
x
தினத்தந்தி 22 March 2019 4:45 AM IST (Updated: 22 March 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். டி.டி.வி. தினகரன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவது உறுதி என்று மதுரை ஆதீனம் கூறினார்.

கபிஸ்தலம்,

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே திருப்புறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் கோவிலுக்கு மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தினகரன், அ.தி.மு.க.வில் இணைவார்

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், அ.தி.மு.க.வும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் டி.டி.வி. தினகரனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் அ.தி.மு.க.வில் இணைவது உறுதி.

தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு பிரசாரம் செய்ய முறையாக என்னை அழைத்தால் நான் பிரசாரம் செய்வேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் பண்பாளர். அவர் நிச்சயம் அ.தி.மு.கவில் மீண்டும் இணைவார். ஜெயலலிதாவிற்கு யாரும் துரோகம் செய்ய மாட்டார்கள் இந்திய திருநாட்டில் இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story