வேறொருவருடன் பழகியதால் ஆத்திரம் கள்ளக்காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது


வேறொருவருடன் பழகியதால் ஆத்திரம் கள்ளக்காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது
x
தினத்தந்தி 22 March 2019 3:45 AM IST (Updated: 22 March 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

வேறொருவருடன் பழகியதால் கள்ளக்காதலியின் ஆபாச படங்களை சமூகவலை தளங்களில் பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

பூதப்பாண்டி,

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே குறத்தியறை பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 44), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இவருடைய ஆட்டோவில் மகளிர் சுயஉதவிக்குழுவில் நிர்வாகியாக இருக்கும் ஒரு பெண் அடிக்கடி பயணம் செய்வது வழக்கம். அந்த பெண்ணுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. அதை தொடர்ந்து நவீனும், சுய உதவிக்குழு பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் நவீனின் குடும்பத்தினர் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

வெளிநாடு சென்ற நவீன் கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார். ஊருக்கு வந்ததும் நவீன், கள்ளக்காதலியை தேடி சென்றார். அப்போது அவர், வேறொரு வாலிபருடன் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதனால் கள்ளக்காதலி மீது நவீனுக்கு கோபம் ஏற்பட்டது. கள்ளக்காதலியுடன் தற்போது பழகி வரும் வாலிபரை சந்தித்து பேசினார். அப்போது நவீன், உன்னுடன் பழகி வரும் பெண்ணின் ஆபாச படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி, அதை அந்த வாலிபரின் செல்போனுக்கு அனுப்பினார். மேலும் அந்த படத்தை சமூக வலைதளங்களிலும் பரப்பியுள்ளார். இந்தநிலையில் வாலிபர், அந்த படத்தை சுய உதவிக்குழு பெண்ணிடம் காட்டினார்.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுபற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீனை கைது செய்தனர். வேறொருவருடன் பழகியதால், கள்ளக்காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story