தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் இன்று சுற்றுப்பயணம் பா.ம.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்


தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் இன்று சுற்றுப்பயணம் பா.ம.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்
x
தினத்தந்தி 21 March 2019 11:00 PM GMT (Updated: 21 March 2019 8:34 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக் கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ம.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கோவிந்தசாமியும், அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.சம்பத்குமாரும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ம.க.-அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். அதன்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொப்பூர் பஸ் நிறுத்தத்தில் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி ஆகியோருக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு நல்லம்பள்ளி பஸ் நிறுத்தத்திலும், 5.30 மணிக்கு தர்மபுரி 4 ரோட்டிலும், மாலை 6 மணிக்கு இண்டூர் பஸ்நிலையத்திலும் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார்.

இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பென்னாகரம் பஸ்நிலையத்திலும், இரவு 7 மணிக்கு பாப்பாரப்பட்டி எம்.ஜி.ஆர்.சிலை அருகிலும், இரவு 7.30 மணிக்கு பாலக்கோடு பஸ்நிலையத்திலும், 8 மணிக்கு வெள்ளிச்சந்தை 4-ரோட்டிலும் முதல்- அமைச்சர் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் 8.15 மணிக்கு அனுமந்தபுரம் பஸ்நிறுத்தத்திலும், 8.30 மணிக்கு காரிமங்கலம் ராமசாமி கோவில் அருகிலும், இரவு 9 மணிக்கு பெரியாம்பட்டி பஸ்நிறுத்தத்திலும், 9.30 மணிக்கு மாட்லாம்பட்டி பஸ்நிறுத்தத்திலும் பா.ம.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

இந்த பிரசார கூட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், கொங்கு இளைஞர்பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

Next Story