போச்சம்பள்ளியில் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
போச்சம்பள்ளியில் போலீஸ்காரர் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தூர்,
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 32). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7-வது பட்டாலியனில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர், தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பணிக்கு சேர்ந்தார். இதனிடையே விபத்து காப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் போச்சம்பள்ளி காவலர்கள் குடியிருப்பில் இருந்த ராமகிருஷ்ணன், இடது கை நரம்புகளை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராமகிருஷ்ணனை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story