தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் த.மா.கா.-அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற சபதம் ஏற்போம்
தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் த.மா.கா.-அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற சபதம் ஏற்போம் என செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்தது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தராசு, சேகர், பகுதி செயலாளர்கள் சரவணன், ரமேஷ், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் அறிவுடைநம்பி வரவேற்றார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நட ராஜன், தஞ்சை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.காந்தி ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜன், தஞ்சை சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் காந்தி ஆகியோரின் வெற்றிக்கு அல்லும், பகலும் அயராது உழைத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய சபதம் ஏற்போம்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஏழை குடும்பங்கள் அனைத்திற்கும் மாதந்தோறும் ரூ.1,500, நீட் தேர்வில் இருந்து விலக்கு, கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி, காவிரி, கோதாவரி நதிகள் இணைப்பு மற்றும் தமிழக வளர்ச்சிக்கு தேவையான முன்னோடி திட்டங்களை அறிவித்த ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் இளங்கோ, த.மா.கா. தெற்கு மாவட்ட தலைவர் என்.ஆர்.ரெங்கராஜன், பா.ம.க. துணை பொதுச் செயலாளர் குஞ்சிதபாதம், தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேல், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் தியாக.காமராஜ், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் கோவி.உத்திராபதி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியை முன்னாள் சட்டசபை தொகுதி செயலாளர் துரை.திருஞானம் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜன், அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.காந்தி ஆகியோர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் தஞ்சை ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Tags :
Next Story