கும்பகோணத்தில் சாராயம் பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 5 பேர் கைது


கும்பகோணத்தில் சாராயம் பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 March 2019 3:45 AM IST (Updated: 22 March 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் சாராயம் பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் பிர்மன் கோவில் அரசலாற்றங்கரை பகுதியில் வெளிமாநில சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மனைவி லெட்சுமி (வயது 32), மார்கண்டன் மகன் நாகராஜ் (31), கருணாநிதி (50), மகேந்திரன் (56), ஜெய்கிருஷ்ணன்(50) ஆகிய 5 பேர் வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக வீடுகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story