காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் மோதும் கோடீசுவர வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனிடம் சொத்து விவரம் தாக்கல்


காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் மோதும் கோடீசுவர வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனிடம் சொத்து விவரம் தாக்கல்
x
தினத்தந்தி 22 March 2019 10:30 PM GMT (Updated: 22 March 2019 9:56 PM GMT)

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் வைத்திலிங்கம் (காங்), டாக்டர் நாராயணசாமி (என்.ஆர்.காங்), எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் (மக்கள் நீதிமய்யம்) ஆகியோர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக தேர்தல் கமிஷனிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

புதுச்சேரி,

காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதுடன் சொத்துக் கணக்கையும் பட்டியிலிட்டுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:- கடந்த நிதியாண்டில் வருமானம் ரூ.35 லட்சத்து 69 ஆயிரத்து 649. கையிருப்பில் ரூ.1 லட்சம் ரொக்கம், வங்கிகள், பங்கு முதலீடுகள், வாகனங்கள் என ரூ.2 கோடியே 95 லட்சம் முதலீடு. மனைவி பெயரில் வங்கிகள், பங்குகள் என சுமார் ரூ.2 கோடியே 55 லட்சம் முதலீடு.

நிலம், வீடு என ரூ.4 கோடியே 12 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான சொத்து, மனைவி பெயரில் ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கள்.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரான டாக்டர் நாராயணசாமி தாக்கல் செய்துள்ள சொத்து விவரம் வருமாறு:- கடந்த ஆண்டு வருமானம் ரூ.64 லட்சம். கையிருப்பில் ரொக்கம் ரூ.3 லட்சம், வங்கிக்கணக்கில் நிலையான வைப்பு தொகையாக ரூ.18 லட்சத்து 50 ஆயிரம், சேமிப்பு கணக்கில் ரூ.11 லட்சத்து 78 ஆயிரம், மனைவி ஐஸ்வர்யாவின் வங்கி கணக்கில் வைப்பு தொகையாக ரூ.1½ லட்சம், சேமிப்பு கணக்கில் ரூ.5 லட்சத்து 43 ஆயிரம். கைவசம் ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள 6½ கிலோ தங்கம் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 16 கிலோ வெள்ளி, மனைவியிடம் ரூ.11½ லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்கம் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 10½ கிலோ வெள்ளி.

ரூ.2 கோடியே 94 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள், ரூ.47 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள். மனைவியிடம் ரூ.23 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகள்.

வங்கி மற்றும் தனி நபர்களிடம் ரூ.1 கோடியே 27 லட்சத்து 39 ஆயிரம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் குறிப்பிட்டுள்ள சொத்து பட்டியல் வருமாறு:- கடந்த நிதியாண்டில் ரூ.25 லட்சத்து ஆயிரத்து 769 வருமானம். கையிருப்பில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் தனது மனைவி சாந்தி கையிருப்பில் ரூ.48 ஆயிரம். பாரதியார் கிராம வங்கி கணக்கில் ரூ.8 ஆயிரத்து 200, யூனியன் வங்கியில் ரூ.4 ஆயிரத்து 167, இந்தியன் வங்கியில் ரூ.1 லட்சத்து 18 ஆயிரம், யூனியன் பேங்க்கில் ரூ.2 கோடியே 50 லட்சம் இருப்பு. பங்குதாரர்களுடன் சேர்ந்து ரூ.7 கோடிக்கு தொழிலில் முதலீடு. கைவசம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 80 கிராம் தங்கம். ரூ.12 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரத்து 395 மதிப்பில் அசையும் சொத்துக்கள். மனைவி வசம் ரூ.15 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள். தனது பெயரில் நிலம் போன்ற ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள், மனைவி பெயரில் ரூ.60 லட்சம் மதிப்பிலான சொத்துக் கள். ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பில் வர்த்தக ரீதியிலான சொத்துக்கள், குடியிருக்கும் வீடு ரூ.2 கோடி மதிப்பில் தனது பெயரிலும், தனது மனைவி பெயரில் ரூ.1.90கோடி மதிப்பிலான வீடுகள்

ஒட்டுமொத்தமாக தனது பெயரில் ரூ.13 கோடியே 67 லட்சம்மதிப்பிலான சொத்துக்கள், மனைவி பெயரில் ரூ.12 கோடியே 62 மதிப்பிலான சொத்துக்கள். வங்கிகளில் தனது பெயரில் ரூ.2 கோடியே 88 லட்சத்து 20 ஆயிரம் கடன்.

புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் கோடீசுவரர்கள் என்பது தேர்தல் கமிஷனில் அவர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

Next Story