மாவட்ட செய்திகள்

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு + "||" + Arani parliamentary constituency AIADMK candidate Gingee elumalai You have to make a lot of votes by winning

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

செஞ்சி,

ஆரணி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலை அறிமுக கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தசாமி, மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி நகர செயலாளர் பிரித்விராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

அ.தி.மு.க. பல தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடக்கிற முதல் தேர்தல் இதுவாகும். அதனால் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு சூழ்ச்சிகளுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் ஆசியோடு 2 ஆண்டாக அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மற்றும் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிட வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. ஆரணி தொகுதியில் போட்டியிடும் செஞ்சி வெ.ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், பா.ம.க. முன்னாள் எம்.பி. துரை, எம்.எல்.ஏ. தூசிமோகன், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தே.மு.தி.க. பார்த்தசாரதி, சிவக்குமார், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் விநாயகம், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பா.ம.க. கனல்பெருமாள், த.மா.கா. மாநில துணை பொதுச்செயலாளர் வி.பி.என்.கோபிநாத், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் வி.ரங்கநாதன், அனந்தபுரம் அரிராமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் - ஜி.கே.வாசன் பேட்டி
வருகிற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார்.
2. 1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
திருமங்கலம், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் நடந்த விழாவில் 1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
3. ‘‘நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சை ஆதரிக்கிறோம்’’ அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோவில் பேச்சை ஆதரிக்கிறோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
4. முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை நிலைப்பாடு - டி.டி.வி.தினகரன் பேட்டி
முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது என ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
5. வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடையும் - முத்தரசன் பேட்டி
வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடையும் என்று ஈரோட்டில் முத்தரசன் கூறினார்.