பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சிவராசு தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சிவராசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில் 41 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள் நியமித்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசியல் கட்சியினர் பிரசார வாகன அனுமதியை தவிர்த்து பிற அனுமதிகளை பெறுவதற்கு புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசியல் கட்சியினர் புதுக்கோட்டை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடமும், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசியல் கட்சியினர் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரையும் அணுகி உரிய அனுமதி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story