மாவட்ட செய்திகள்

விவசாயி சரமாரி வெட்டிக் கொலை; 5 பேர் படுகாயம் பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது + "||" + Farmer's volley killing; Three persons, including a famous gangster, have been detained by five people

விவசாயி சரமாரி வெட்டிக் கொலை; 5 பேர் படுகாயம் பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது

விவசாயி சரமாரி வெட்டிக் கொலை; 5 பேர் படுகாயம் பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது
சாமல்பட்டியில் திருவிழாவில் நடந்த மோதலில் விவசாயி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக பிரபல ரவுடி ஜிம் மோகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டியில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர் சிலரை முன் வரிசையில் அமர வைத்து, மரியாதை செய்தனர். இதற்கு ஊர்பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சியினரை விழாவிற்கு அழைத்து வந்து மரியாதை செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதனால் ஊர்பொதுமக்களுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அந்த நேரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன் மற்றும் சிலர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பரசுராமன் (வயது 38) என்பவரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் பரசுராமனின் மனைவி மேகலா (30) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் சண்டையை தடுக்க சென்ற அண்ணாமலை(50). கோவிந்தி(55). புகழேந்தி(30). முனியம்மாள்(45) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்ட பரசுராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிம் மோகன்(37), வெற்றிவேல்(25), வேடியப்பன்(45) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை தொடர்பாக மேலும் 16 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான ஜிம் மோகன் பிரபல ரவுடி ஆவார். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 4 முறை குண்டர் சட்டத்திலும் கைதான அவர் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் உள்ளார். இந்த கொலை காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே பரசுராமனின் உடலை வாங்க மறுத்தும், கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பரசுராமனின் உறவினர்கள், பொதுமக்கள் சாமல்பட்டியில் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மகனின் காதல் விவகாரத்தில் விவசாயி வெட்டிக்கொலை காதலியின் தந்தை உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
லாலாபேட்டை அருகே மகனின் காதல் விவகாரத்தில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காதலியின் தந்தை உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து
எஸ்.புதூர் ஒன்றியம் கே.உத்தம்பட்டியில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
3. சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை - வாலிபர் கைது
சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற, விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
அரக்கோணம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
5. சேர்ந்து வாழ மறுத்த பெண் கொலை: முன்னாள் கவுன்சிலருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த பெண்ணை கொன்ற முன்னாள் கவுன்சிலருக்கு தஞ்சை கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.