மாவட்ட செய்திகள்

சேலத்தில், இரவில் வாகன பட்டறையில் திடீர் தீ விபத்து + "||" + A fire broke out at the auto workshop at night in Salem

சேலத்தில், இரவில் வாகன பட்டறையில் திடீர் தீ விபத்து

சேலத்தில், இரவில் வாகன பட்டறையில் திடீர் தீ விபத்து
சேலத்தில், இரவில் வாகன பட்டறையில் திடீர் தீ விபத்து பொருட்கள் எரிந்து சேதம்.
சேலம்,

சேலம் எருமாபாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவரது வாகன பட்டறை உள்ளது. இந்த பட்டறையில் நேற்று இரவு பணியாளர்கள் வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் பட்டறையை பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் இரவு 10 மணியளவில் பட்டறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதையடுத்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சிராஜூதின் தலைமையில் 5 வாகனங்களில் தீயை அணைப்பதற்காக சம்பவ இடத்திற்கு வீரர்கள் சென்றனர். அங்கு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே பட்டறையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியிருக்கலாம் எனவும், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. தான்சானியாவில் லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
தான்சானியாவில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்து உள்ளது.
2. மகாராஷ்டிராவில் சாலை விபத்து; 11 பேர் பலி
மகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்றின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
3. நாகர்கோவில் பயிற்சி மையத்தில் 10 கம்ப்யூட்டர்கள் தீயில் எரிந்து நாசம்
நாகர்கோவிலில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கம்ப்யூட்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின.
4. சேலம் அருகே, விபத்தில் சிக்கிய தொழிலாளியின் ஸ்கூட்டர், நகையை திருடிய கும்பல்
சேலம் அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளியின் ஸ்கூட்டர் மற்றும் நகையை திருடி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
5. அறந்தாங்கி வாகன உதிரி பாக விற்பனை கடையில் தீ விபத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
அறந்தாங்கியில் உள்ள வாகன உதிரி பாக விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.