வடுவூர் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


வடுவூர் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 March 2019 4:00 AM IST (Updated: 25 March 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வடுவூர்,

வடுவூரில் கோதண்டராமர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் பங்குனி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இதையொட்டி கோவிலில் இருந்து சீதாதேவி, லட்சுமணன், அனுமனுடன் கோதண்டராமர் வீதி உலா நடந்தது. அதனைத்தொடர்ந்து யாகசாலையில் ஹோமம் வளர்க்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். அதன்பின்னர் சாமிகளுக்கு மாலை மாற்றுதல் நடத்தப்பட்டு சீதாதேவியுடன் கோதண்டராமரை ஒன்றாக ஊஞ்சலில் எழுந்தருள செய்தனர். பின்னர் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வடுவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story