வேளாங்கண்ணி அருகே ஆம்னி வேன் மீது கார் மோதியது; 2 பேர் பலி 8 பேர் படுகாயம்


வேளாங்கண்ணி அருகே ஆம்னி வேன் மீது கார் மோதியது; 2 பேர் பலி 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 March 2019 3:45 AM IST (Updated: 25 March 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே ஆம்னி வேன் மீது கார் மோதியதில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் படுகாயமடைந்தனர்.

வேளாங்கண்ணி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தென்னார் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி(வயது32), அவரது மனைவி சுகன்யா (26), இவர்களது குழந்தை மோஷிதா(7), ராஜா (35), அவரது மனைவி தேவி(28), பாலமுரளி (36) ஆகியோர் ஆம்னி வேனில் திருவண்ணாமலையில் இருந்து வேளாங்கண்ணி அருகே உள்ள காடன்தேத்தி அய்யனார் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை வந்தவாசி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி ஓட்டிவந்தார். அப்போது வேளாங்கண்ணி ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி எதிரே வந்த கார் திடீரென ஆம்னி வேன் மீது மோதியது.

இதில் பாலமுரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆம்னி வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணை

இந்தவிபத்தில் காரில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரம் புதுமனை இரண்டாம் தெருவைசேர்ந்த பெரியண்ணா(51), பர்மா காலனியை சேர்ந்த கோதை (74), காரைக்குடி பர்மாகாலனியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அனைவரையும் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கோதை பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story