மாவட்ட செய்திகள்

பஸ் சக்கரங்களில் சிக்கி வாலிபர் பலி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பரிதாபம் + "||" + The bus fell on the wheels and fell on the motorbike and fell on the motorbike

பஸ் சக்கரங்களில் சிக்கி வாலிபர் பலி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பரிதாபம்

பஸ் சக்கரங்களில் சிக்கி வாலிபர் பலி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பரிதாபம்
அய்யம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர், பஸ் சக்கரங்களில் சிக்கி பலியானார்.
அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள பூஞ்சேரியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் தமிழழகன் (வயது27). இவருடைய உறவினர் பசுபதிகோவில் குச்சிபாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் வெங்கடேசன் (32). இவர்கள் இருவரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் பள்ளி அக்ரஹாரத்துக்கு சென்றனர்.


பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தமிழழகன் ஓட்டி வந்தார். வெங்கடேசன் பின்னால் அமர்ந்து இருந்தார். அய்யம்பேட்டை அருகே தண்டாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து வெங்கடேசன் தவறி கீழே சாலையில் விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி வந்த பஸ் வெங்கடேசன் மீது ஏறியது. இதில் பஸ் சக்கரங்களில் சிக்கி வெங்கடேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. சீனாவில் கப்பல் மூழ்கி 7 பேர் சாவு
சீனாவில் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானார்கள்.
3. தஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி
தஞ்சை அருகே கோவில் விழாவில் பங்கேற்று திரும்பியபோது மரத்தில் கார் மோதியதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. சூளகிரி அருகே வேன் மீது லாரி மோதல்; 2 பெண்கள் பலி டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்
சூளகிரி அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் பலியானார்கள். மேலும் டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. மொபட்-மோட்டார்சைக்கிள் மோதல்: வாலிபர் பலி
தஞ்சை அருகே மொபட்-மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.