பறக்கும் படையினர் வாகன சோதனை


பறக்கும் படையினர் வாகன சோதனை
x
தினத்தந்தி 25 March 2019 4:15 AM IST (Updated: 25 March 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெறும் என அறிவித்தது.

புதுக்கோட்டை,

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் புதுக்கோட்டையில் உள்ள மாலையீட்டில் உள்ள வெள்ளாற்று பாலம், பெரியார்நகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்த பின்னரே செல்ல அனுமதிக்கின்றனர். இவ்வாறு சோதனை செய்யும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. 

Next Story