வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பணி புரிவது என்பது குறித்து பயிற்சி புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்குச் சாவடிகளில் எவ்வாறு பணி புரிவது என்பது குறித்து பயிற்சி புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இதேபோல கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் புதுப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் வளாகத்திலும், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் ஆரியூரில் உள்ள குமரன் பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு அரசம்பட்டியில் உள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியிலும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டியில் உள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பயிற்சியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்டத்தில் ஆயிரத்து 538 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 7 ஆயிரத்து 436 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இன்று (நேற்று) பயிற்சி நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு உள்ள அறிவுரைகளின் படி வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தங்களது பணிகளை முழுமையாக அய்யமின்றி தெரிந்துகொண்டு சிறப்பாக பணியாற்றும் வகையில் இத்தகைய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story