வாக்குச்சாவடிகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும் இரும்பு பெட்டிகளை பழுது பார்க்கும் பணி தீவிரம்


வாக்குச்சாவடிகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும் இரும்பு பெட்டிகளை பழுது பார்க்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 25 March 2019 4:30 AM IST (Updated: 25 March 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

வாக்குசாவடிகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும் இரும்பு பெட்டிகளை பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாக்குசாவடிகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும் வகையிலான இரும்பு பெட்டிகள், கடந்த கால தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டு அப்படியே கரூர் தாலுகா அலுவலத்தில் வைக்கப்பட்டிருந்து. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக அவை வெளியே எடுக்கப்பட்டு உள்ளன.

எனினும் அந்த பெட்டிகள் விரிசல் அடைந்தும், பூட்டுகள் உடைந்தும் இருந்தன. இதன்காரணமாக கரூரில் பூட்டுகளை பழுதுபார்க்கும் தொழிலாளர்களை தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தி, அதனை சரிசெய்யும் பணிகரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

சரிசெய்தனர்

அப்போது அந்த தொழிலாளர்கள் சுத்தியலால், இரும்பு பெட்டியை தட்டி விட்டு ஒடுக்கை சரி செய்தனர். மேலும் தேர்தலுக்காக அந்த இரும்பு பெட்டிகளை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்தப்பட்டு வருகிறது. தேர்தல் நாள் அன்று வாக்குசாவடிக்கு தேவையான பொருட்கள் இந்த பெட்டியில் வைக்கப்பட்டும் என்பது தான் அனுப்பி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.


Next Story