காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க., பா.ம.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களான அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை,
காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.மரகதம் குமரவேல், காஞ்சீபுரம் நகராட்சி முன்பு உள்ள அண்ணா, காமராஜர், காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்கினார். அவருடன் பொறுப்பாளர் பா.வளர்மதி, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட பலர் ஊர்வலமாக அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தனர்.
அங்கு, காஞ்சீபுரம் கலெக் டர் அலுவலக மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையாவிடம் அ.தி.மு.க. வேட்பாளர் கே.மரகதம் குமரவேல் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் நேற்று காஞ்சீபுரத்தில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி சுந்தரமூர்த்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்தி கமலம்மாள், திருக்கச்சூர் ஆறுமுகம், மாவட்ட பா.ம.க. செயலாளர் உமாபதி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story