நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் மனு தாக்கல்


நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் மனு தாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 4:30 AM IST (Updated: 26 March 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

திருவாரூர்,

நாகை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.கூட்டணியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் நேற்று தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட கலெக்டருமான ஆனந்திடம் தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக மன்னார்குடி முன்னாள் நகரசபை தலைவர் உதயகுமாரி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான ஆர்.காமராஜ், பா.ஜனதா மாநில செயலாளர் வேதரத்தினம், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பாலு, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதே தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் எம்.செல்வராசு வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன் மனு தாக்கல் செய்தார்.

அப்போது நாகை தி.மு.க. மாவட்ட செயலாளர் கவுதமன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரைவேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் மாலதி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அனிதா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சுயேச்சை வேட்பாளர் களாக வேதரத்தினம், ஸ்ரீராம், ஜெகதீஷ் என மொத்தம் 10 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

Next Story