வேதாரண்யம் அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு மளிகைக்கடை உரிமையாளர் கைது


வேதாரண்யம் அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு மளிகைக்கடை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 26 March 2019 3:45 AM IST (Updated: 26 March 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மளிகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜா (வயது54). விவசாயி. வேட்டைக்காரனிருப்பை சேர்ந்த சரவணன் மகன் இந்திரன் (34). இவர் மளிகைக்கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில்சம்பவத்தன்று தர்மராஜா மோட்டார் சைக்கிளில் வேட்டைக்காரனிருப்பில் உள்ள நிலங்களை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, இந்திரன் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி ரூ.7 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

கைது

இதுகுறித்து தர்மராஜ் வேட்டைகாரனிருப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் ்திருஞானம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இந்திரனை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story