18 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறச்செய்து அ.தி.மு.க. ஆட்சி தொடர தே.மு.தி.க. ஒத்துழைக்கும்
18 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்து, அ.தி.மு.க. ஆட்சி தொடர தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பு தரும் என்று பிரேமலதா பேசினார்.
மலைக்கோட்டை,
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் வளர்மதி, ப.குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மேலும் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், ஜெயலலிதா இறந்ததற்கும், விஜயகாந்த் உடல் நலன் குன்றியதற்கும் தி.மு.க.தான் காரணம். நம் கூட்டணி எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம். திருச்சியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்று தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளராக ஆக்குவோம், என்றார்.
கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளரை அறிமுகம் செய்து, பேசியதாவது;-
நம் கூட்டணி ராசியான கூட்டணி. அதற்கு 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றிதான் உதாரணம். சாதாரணமானவர்களை மிகப்பெரும் வல்லமை பெற்றவர்களாக மாற்றியவர்கள் ஜெயலலிதா, விஜயகாந்த். கூட்டணியில் இருப்பவர்கள் அதிக பக்தி கொண்டவர்கள். எதிரணியில் இருப்பவர்கள் பக்தி இல்லை என்பார்கள். ஆனால் கொல்லைப்புறம் வழியாக சென்று கடவுள்களை வணங்குவார்கள். இந்த கூட்டணி மே மாதம் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.
எந்த மனக்கசப்பு இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்து விட்டு கூட்டணி வெற்றி பெற அனைவரும் சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும். நம்பி வந்தவர்களுக்கு துணை நின்று அவர்களை வெற்றி பெற வைப்பவர்கள் அ.தி.மு.க.வினர். ராகுல் காந்திக்கும், மோடிக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான வித்தியாசம் உள்ளது.
எங்கள் கூட்டணி கட்சியினரின் தேர்தல் அறிக்கை தான் தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கை. ஜெயலலிதாவை, அமெரிக்காவிற்கு அழைத்து சென்று மருத்துவம் பார்த்திருந்தால் அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார் என்று நானும், விஜயகாந்தும் தினமும் நினைத்தோம். 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும், அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, இந்த ஆட்சி தொடர தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பு தருவோம். விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு வருவார். அதற்கான விவரம் விரைவில் தலைமைக்கழகத்தில் இருந்து வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சி தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story