அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்
சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் பொ.சந்திரசேகர் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வாக்கு கேட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
அரியலூர்,
சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் பொ.சந்திரசேகர் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வாக்கு கேட்டு பிரசாரத்தை தொடங்கினார். அரியலூர் தவுத்தாய்குளம், செந்துறை சாலை, ராஜாஜி நகர், ரெயிலடி, காந்திமார்க்கெட், பஸ் நிலையம், மார்க்கெட் தெரு, தேரடி உள்ளிட்ட 18 வார்டுகளிலும் திறந்த வேனில் நின்றபடி வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர். இதில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள கடைவீதி, வாரசந்தை, பஸ் நிலையம், செங்குந்தபுரம், கரடிகுளம், கீழக்குடியிருப்பு, சின்னவளயம், மேல குடியிருப்பு, மருத்துவமனை சாலை உள்பட 21 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், பா.ம.க. மாநில துணை தலைவர் வைத்தி, முன்னாள் எம்.எல்.ஏ. மாசிலாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story