நாகை நாடாளுமன்ற தொகுதியில் 19 பேர் வேட்பு மனு தாக்கல்


நாகை நாடாளுமன்ற தொகுதியில் 19 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 27 March 2019 4:15 AM IST (Updated: 27 March 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

நாகை நாடாளுமன்ற தொகுதியில் 19 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

திருவாரூர்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி நாகை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நேற்று வேட்பு மனு தாக்கல் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. வேட்பாளர் செங்கோடி வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுலவரும், மாவட்ட கலெக்டருமான ஆனந்திடம் தாக்கல் செய்தார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் குருவையா, சுயேச்சை வேட்பாளர்கள் அம்பிகாபதி, சவுந்தரராஜன், ஜெயலட்சுமி, பாலகுரு, சம்பத், சம்பத்குமார், சிவக்குமார் என மொத்தம் 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாகை நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவேட்பாளர்கள் மற்றும் 10 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 19 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) வேட்பு மனுக்கள் பரீசிலனையும், 29-ந் தேதி வேட்பு மனு வாபஸ் பெறப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல், வேட்பாளர்கள் சின்னத்துடன் வெளியிடப்படும்.

Next Story