பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடாது என துண்டு பிரசுரம் வினியோகம் கல்லூரி மாணவர் கைது


பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடாது என துண்டு பிரசுரம் வினியோகம் கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 26 March 2019 10:15 PM GMT (Updated: 26 March 2019 7:10 PM GMT)

மன்னார்குடியில் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடாது என வலியுறுத்தி துண்டு பிரசுரம் வினியோகம் செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் சர்வத்ரபீக் (வயது18). இவர் மன்னார்குடி அரசினர் கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மன்னார்குடி அரசு கல்லூரி வளாகத்தில் மாணவர் சர்வத்ரபீக் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்துள்ளார். அதில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டு இருந்து.

இந்த துண்டு பிரசுரங்களை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சர்வத்ரபீக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.

Next Story