பெங்களூரு வடக்கு தொகுதியில் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா வேட்புமனு தாக்கல் சதானந்தகவுடாவுக்கு எதிராக களம் இறங்கினார்


பெங்களூரு வடக்கு தொகுதியில் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா வேட்புமனு தாக்கல் சதானந்தகவுடாவுக்கு எதிராக களம் இறங்கினார்
x
தினத்தந்தி 26 March 2019 10:45 PM GMT (Updated: 26 March 2019 9:33 PM GMT)

பெங்களூரு வடக்கு தொகுதியில் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய மந்திரி சதானந்தகவுடாவுக்கு எதிராக அவர் களம் இறங்கியுள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூரு வடக்கு தொகுதியில் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய மந்திரி சதானந்தகவுடாவுக்கு எதிராக அவர் களம் இறங்கியுள்ளார்.

மத்திய மந்திரி சதானந்தகவுடா

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 20 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 8 தொகுதியிலும் போட்டியிடுவது என்று தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் பலமான வேட்பாளர்கள் இல்லை என்று கூறி பெங்களூரு வடக்கு தொகுதியை ஜனதா தளம்(எஸ்), காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தது. பெங்களூரு வடக்கு தொகுதியை பொறுத்தவரையில் மத்திய மந்திரி சதானந்தகவுடா பலம் வாய்ந்த வேட்பாளராக களத்தில் உள்ளார்.

போட்டி பலமாக இருக்கும்

அவரை தோற்கடிக்க யாரை காங்கிரஸ் சார்பில் களம் இறக்குவது என்று சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு கூடி ஆலோசனை நடத்தினர். இதில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடாவை காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பெங்களூரு வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கந்தாய பவனில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். ஒக்கலிகர் சமூக மக்கள் அதிகமாக வசிக்கும் பெங்களூரு வடக்கு தொகுதியில், கிருஷ்ண பைரேகவுடா களம் இறங்கியுள்ளதால் போட்டி பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story