வானவில் : தானியங்கி ‘ஸ்மார்ட் பி’


வானவில் : தானியங்கி ‘ஸ்மார்ட் பி’
x
தினத்தந்தி 27 March 2019 11:14 AM GMT (Updated: 27 March 2019 12:19 PM GMT)

குழந்தைகளை உட்கார வைத்து தள்ளிக் கொண்டு செல்லும் வண்டிகளான ஸ்ட்ரோலர்கள் வெளிநாடுகள் மட்டுமின்றி தற்போது இந்தியாவிலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வண்டிகளை சரிவுகளில் ஏற்றிச் செல்வது சற்று கடினமாக இருக்கும். இந்த பிரச்சினையை மனதில் கொண்டு ஒரு நவீன ஸ்ட்ரோலரை உருவாக்கியுள்ளனர்.

‘ஸ்மார்ட் பி’ என்ற பெயர் கொண்ட இந்த ஸ்ட்ரோலர் வண்டியில் ஒரு மின்சாதன என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தானாகவே ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்து கொள்கிறது. அதனால் நாம் சிரமப்பட்டு தள்ள வேண்டியதில்லை . சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதால் பெற்றோரிடமிருந்து அதிக தூரம் வண்டியை இழுத்து சென்று விடாது. குழந்தையை லேசாக ஆட்டி தூங்க வைக்கும் ராக்கர், பால் பாட்டிலை சுத்தம் செய்யும் கருவி மற்றும் இசையை ஒலிக்க செய்வது என்று பலவித சிறப்பம்சங்களும் இந்த ஸ்ட்ரோலரில் இருக்கின்றன. இதன் விலை சுமார் ரூ.28,800.

Next Story