வானவில் : டிஜிட்டல் ஓவியங்களை சிலேட்டில் வரையலாம்


வானவில் : டிஜிட்டல் ஓவியங்களை சிலேட்டில் வரையலாம்
x
தினத்தந்தி 27 March 2019 4:53 PM IST (Updated: 27 March 2019 5:48 PM IST)
t-max-icont-min-icon

ஓவியத் துறையில் உள்ளவர்களுக்கு நவீன கருவிகள் வந்த போதும் பேப்பரில் வரைவதே சவுகரியமாகத் தோன்றும்.

நுணுக்கமான ஓவியங்களை டேப்லெட்டிலோ வேறு ஸ்மார்ட் கருவிகளிலோ வரைய முடியாது. பிரெஞ்சு நிறுவனமான ISKN தயாரித்துள்ள சிலேட் (SLATE) என்னும் டேப்லெட்டில் நாம் வரையும் அனைத்தும் உடனடியாக திரையில் தோன்றுகின்றன. எவ்வகையான காகிதத்திலும் நாம் வரையலாம். அதே போல் குறிப்பிட்ட வகையான பேனாவில் தான் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடும் இதில் இல்லை.

வரைய வேண்டிய காகிதத்தை, ஒரு கிளிப் கொண்டு டேப்லெட்டின் மீது வைத்த பின்பு, இத்துடன் இணைப்பாக வருகின்ற ஒரு வளையத்தைப் பேனாவின் மீது மாட்டி வரையத் தொடங்கலாம். நாம் வரையும் ஓவியங்கள் உடனடியாக டிஜிட்டல் ஓவியங்களாக மாறித் திரையில் தோன்றும்.

அதில் வேண்டிய மாற்றங்களையும் செய்து கொள்ள முடியும்.

இதனால் வரையக்கூடிய ஓவியங்கள் அனைத்தும் பதிவுகளாக சேமித்துக் கொள்ளலாம். பேப்பரில் உள்ள ஓவியங்கள் அழிந்தாலும் சிலேட்டில் இருந்து எப்போது வேண்டுமானாலும் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.

Next Story