வானவில் : பொருட்களை சுமந்து செல்லும் இயந்திரம்
பெரிய வணிக வளாகங்களில் பொருட்களை சரக்கு வண்டிகளில் இருந்து ஏற்றி இறக்குவது மிகவும் கடினமான வேலைகளில் ஒன்று.
எடை அதிகமுள்ள பொருட்களை தூக்கிச் செல்வது மனிதர்களுக்கு சிரமமாக இருக்கும். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எலிபோர்ட் நிறுவனம் முழுவதும் தானியங்கியாக செயல்படக்கூடிய ரோபோக்களை இந்த பணியில் ஈடுபடுத்த உள்ளது. இந்த ரோபோக்கள் தானே பொருட்களை ஏற்றியும், டெலிவரி செய்யும் இடத்தில் இறக்கவும் செய்கின்றன. இவை தானாகவே 40 கிலோ வரையுள்ள எடையை சுமந்து கொண்டு சாலைகளை கடந்து செல்வதை பார்க்கும் போது மிகவும் வியப்பாக உள்ளது.
மனிதர்கள், விலங்குகள், வாகனங்கள் மீது மோதாமல் நகர்ந்து செல்லும் இந்த ரோபோக்கள் முப்பரிமாண மேப்புகளையும் ( MAPS ) சென்சார்களையும் உபயோகித்து உரிய இடத்திற்கு செல்வதற்கு எது சுலபமான வழி என்பதை கண்டறிந்து அவ்வழியே செல்கின்றன.
ஒரு சராசரி மனிதன் நடக்கக் கூடிய வேகத்தில் இவை நகர்ந்து செல்கின்றன. பல முன்னணி சூப்பர் மார்கெட்டுகள் இந்த கண்டுபிடிப்பிற்கு பெரும் வரவேற்பை தெரிவித்துள்ளன. 2020-ம் ஆண்டு முதல் இவை அதிகளவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன.
Related Tags :
Next Story