வானவில் :‘ஸ்கோடா ஆக்டேவியா’ கார்பரேட் எடிஷன் அறிமுகம்
சொகுசுக் கார்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் ஸ்கோடா நிறுவனம் தனது ஆக்டேவியா பிராண்டில் கார்பரேட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.15.49 லட்சமாகும்.
டீசல் மாடல் விலை ரூ.16.99 லட்சமாகும். ஸ்கோடா ஆக்டேவியா கார்பரேட் எடிஷனில் பெட்ரோல் மாடல் ரூ.50 ஆயிரம் விலை குறைவாகும். இதேபோல டீசல் மாடலுக்கு ரூ.1 லட்சம் சலுகை அளிக்கப்படுவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கார்பரேட் எடிஷனில் 6.5 அங்குல தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. அத்துடன் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, மிருதுவான இருக்கைகள், 16 அங்குல அலாய் சக்கரம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் ஆகியன உள்ளன. இதில் பாதுகாப்பு அம்சங்களுக்காக 4 ஏர் பேக்குகள் உள்ளன. ஏ.பி.எஸ். வசதியுடன் இ.பி.டி., ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட், ஸ்லிப் ரெகுலேஷன், மோட்டார் ஸ்பீடு ரெகுலேஷன், இ.டி.எல்., எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் (இ.எஸ்.சி.), மல்டி கொலிஷன் பிரேக்கிங் (எம்.கே.பி.) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடலானது 150 ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறன் கொண்டது. இது 6 கியர்களுடன் வந்துள்ளது.
இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 16.7 கி.மீ தூரம் ஓடியுள்ளது. டீசல் மாடல் 2 லிட்டர் டர்போ என்ஜினைக் கொண்ட இது 143 ஹெச்.பி. திறன் மற்றும் 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. டீசல் ஏ.எம்.ஜி. மாடல் லிட்டருக்கு சோதனை ஓட்டத்தில் 21 கி.மீ. தூரம் ஓடியுள்ளது.
ஸ்கோடா நிறுவனம் ஷீல்டு பிளஸ் எனும் திட்டத்தை கார்பரேட் எடிஷன் மாடலுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஓராண்டுக்கு ஒருங்கிணைந்த காப்பீடு வசதி, 3 ஆண்டுகளுக்கு மூன்றாம் தரப்பு காப்பீடு (தேர்டு பார்டி இன்சூரன்ஸ்) ஆகியவற்றுடன் நான்கு ஆண்டுகளுக்கு உத்தரவாதத்தையும் அளிக்கிறது.
இந்த காப்பீடானது 5 மற்றும் 6-வது ஆண்டுக்கும் நீட்டிக்கலாம். இந்த மாடலுக்கு டொயோடா கொரோலா ஆல்டிஸ், ஹூண்டாய் எலன்ட்ரா, ஹோண்டா சிவிக் ஆகிய மாடல்கள் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story